தமிழகம்

வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடு: ஒவ்வொரு முகாமிலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு

அ.அருள்தாசன்

வெளிமாநிலங்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருவோரைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கவும், அவர்களுக்கு நாள்தோறும் இருவேளை கபசுர குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

கரோனா தடுப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்திற்கு மகராஷ்டிரா, குஜராத் பிற மாநிலங்களிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் ரயில் மற்றும் விமானம் மூலம் வருவோரை பல்வேறு இடங்களில் பிரித்து தங்க வைக்கவும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நோய் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கும் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், சத்தான உணவு அனைவருக்கும் கிடைத்திடவும் மற்றும் மருத்துவ தேவைகளை தடையின்றி கிடைப்பதற்கு ஒவ்வொரு முகாம்களுக்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் வட்டாச்சியர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார துறை அலுவலர்கள்,காவல்துறை ஆய்வாளர்கள் தன்னார்வலர்கள், இடம் பெற்றுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இருவேளை கபசூரன குடிநீர் வழங்க வேண்டும். சத்து மாத்திரைகள், நில வேம்பு குடிநீர் போன்றவற்றை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முகாம்களில் குடிநீர்,மின்சார வசதி,ஜெனரேட்டர் போன்றவை முழுமையாக செயல்படுகிறதா என்பதையும் கழிப்பிறை வசதிகள் முறையாக சுத்தம் செய்யபடுகிறதா என்பதையும்,குப்பைகளை உடனக்குடன் முறையாக அகற்றபடுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் .

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT