தமிழகம்

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்த கரோனா மருத்துவப் பணியாளர்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

கரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள மலர்களை காணஇன்று அனுமதிக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மார்ச் இறுதியில் நடைபெறும் கோடை விழா மலர்கண்காட்சி இந்த ஆண்டு நடைபெறவில்லை.

முன்னதாக நூற்றுக்கணக்கான மலர்செடிகள் பராமரிக்கப்பட்டுவந்தநிலையில் தற்போது அவை பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்குகின்றன.

பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலாபயணிகள் தான் இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் கரோனா கால சேவைபணியை பாராட்டும்விதமாக கொடைக்கானல் பிரையண்ட்பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை காண அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவபணியாளர்களை கவுரவப்படுத்தும்விதமாகவும், அவர்கள் மன அழுத்ததை போக்கும் விதமாகவும் பிரையண்ட்பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை கண்டு ரசிக்க நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவபணியாளர்களை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள் தங்கள் மன அழுத்ததை போக்கும் விதமாக பூங்காவிற்கு வந்து செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படுவர், என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT