சிவகங்கையில் யாசகம் பெற்ற ரூ.5 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக முதியவர் வழங்கினார்.
சிவகங்கை அருகே மலைஅழகிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (87). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, மனைவி, 2 மகன்களை பிரிந்து இடையமேலூர் மாயாண்டி சித்தர் கோயில் வாசல் மற்றும் பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி பெறப்பட்டு வருகிறது. இதை கேள்விப்பட்ட முதியவர் முத்துக்கருப்பன் தான் யாசகம் பெற்று சேமித்து வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதியிடம் வழங்கினார்.
முதியவர் தான் யாசகம் பெற்ற பணம் முழுவதையும் நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் அதிகாரிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து முதியவர் செயலைப் பாராட்டி முத்துகருப்பனுக்கு வட்டாட்சியர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.