திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு கோடையின் அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும் நாளில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இந்தாண்டு மே 4-ல் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்றது.
இந்த காலகட்டத்தில் சூரிய ஒளி நேரடியாக பூமி மீது விழும். அதனால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வானிலை ஆய்வு மைய தரவுகளில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்ற வார்த்தையே இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நெல்லையில் இவ்வாண்டு கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
திருநெல்வேலியில் பகல்நேர வெப்பநிலை 104 டிகிரி அளவுக்கு வெப்பம் தகித்தது.
இந்நிலையில் இவ்வாண்டு கோடையின் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான இன்று பிற்பகலில் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது. இதனால் காலையில் தகித்த வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பெருத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது அதற்கு தாக்குப் பிடிக்காமல் கீழே சாய்ந்து கிடந்த போக்குவரத்து பேரிகாட் தடுப்புகள்