மும்பையில் இருந்து நெல்லை வந்தடைந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 67 பேர் இன்று அதிகாலையில் இரு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 13250 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ
தில் கரோனா பாதிப்பு 62 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, மும்பை உட்பட வெளியூர்களில் இருந்து இதுவரை கரோனா பாதிப்பிற்கு பின்பு 8500க்கும் மேற்பட்டோர் குமரி வந்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வருவோருக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பையில் இருந்து நெல்லை வந்தடைந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 67 பேர் இன்று அதிகாலையில் இரு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.
ஆரல்வாய்மொழியில் அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சொந்த வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.