சேலத்தில் உள்ள சசிபெருமாளின் இல்லத்துக்கு நேற்று வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை சசிபெருமாளின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
சேலம் மாவட்டம், இடைப் பாடி, மேட்டுக்காட்டைச் சேர்ந்த மறைந்த காந்தியவாதி சசிபெருமா ளின் இல்லத்துக்கு தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வந்தார். அப்போது அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தி அனுப்பிய இரங்கல் கடிதத்தை சசிபெருமாளின் குடும்பத்தினரிடம் வழங்கி, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ.5 லட்சத் துக்கான காசோலையை சசிபெரு மாளின் குடும்பத்தினரிடம் இளங் கோவன் வழங்கினார்.
அப்போது செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: மதுவை ஒழிக்க போராடி உயிரி ழந்த சசிபெருமாளின் குடும்பத் துக்கு, தமிழக அரசு சார்பில் அனுதாபம் கூட சொல்லாதது வேதனைக்குரியது. சசிபெருமா ளின் பூரண மதுவிலக்கு போராட் டத்தை காங்கிரஸ் கட்சி தொடரும்.
மதுவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல் அனைத்து தரப்பினரும் போராடி வரும் நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில், அறிவிப்பு வெளிவராதது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.