மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த காளிதாஸ் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழக நீர்நிலைகளில் குடி மராமத்துப் பணி மேற்கொள்ள தமிழக அரசு மே 6-ல் அறி விப்பு வெளியிட்டது. உயர் நீதி மன்ற மதுரைக்கிளை அதன் வரம் புக்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க ஏற்கெனவே தடை விதித்துள்ளது.
இந்தத் தடையைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு சவடு மண் எடுக்க அனுமதித்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் கே.செல்வக் குமார் வாதிடுகையில், மனுதாரர் குறிப்பிடுவதுபோல அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை. செய்திக் குறிப்பு மட்டுமே வெளி யிடப்பட்டது.
குடிமராமத்து மூலமாக இதுவரை 6,69,900 விவசாயி களும், மண்பாண்டத் தொழில் செய்வோரும் பயன் பெற்றுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று விவசாயப் பணிக் காகவும் மண் பாண்டங்களைச் செய்யவும் வண்டல் மண், களி மண் போன்ற வற்றை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். அதற்கு நீதிபதிகள், 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க தடையுள்ள நிலையில் செய்திக் குறிப்பு எப்படி வெளியிடப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், 13 மாவட்டங்கள் நீங்கலாகவே அந்தச் செய்திக்குறிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக எழுத்துப் பூர்வமான பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும், என்றார்.
இதையடுத்து ஒவ்வொரு மாவட் டத்திலும் பதிவு பெற்ற எத்தனை மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர்? என்பது குறித்தும் பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஜூன் 3-க்கு ஒத்திவைத்தனர்.
போலீஸ் நடவடிக்கை
இளையான்குடி முத்தூர் கிராமத்தில் சவடு மண் அள்ள தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குறிப்பிட்டுள்ள சர்வே எண்ணில் சவடு மண் அள் ளுவதற்கு யாருக்கும் உரிமம் வழங்கவில்லை என கனிமவளத் துறை உதவி இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமாக சவடு மண் அள்ளுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.