தமிழகம்

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள மாணவர்களுடன் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பு

செய்திப்பிரிவு

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினார்.

சென்னையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவிகள், 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று புழல் சிறைக்கு சென்று மாணவ, மாணவிகளை சந்தித்துப் பேசினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறும்போது, ‘‘மது விலக்கு கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்து இரவோடு இரவாக புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களை சிறையில் சந் தித்துப் பேசினோம். காயமடைந்த வர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்திருப்பது வேதனை அளிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.

மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும்’’ என்றார்.

விஜயகாந்த் சந்திப்பு

ஸ்டாலினைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி ஆகி யோர் புழல் சிறைக்கு சென்று பச்சையப்பன் கல்லூரி மாணவர் களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ‘‘டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று சொன்ன மாணவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மாணவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன் அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT