சென்னை, மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள காவலர் ஓய்வு அறையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். உடன் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு மண்டல இணை ஆணையர். சி.மகேஸ்வரி உள்ளிட்டோர். 
தமிழகம்

கரோனாவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தி.நகர் காவல் துணை ஆணையருக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வரவேற்பு

செய்திப்பிரிவு

தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் அசோக் குமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பினார். அவரை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தியாகராயநகர் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேற்று காலைசென்று, அசோக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற் றார்.

மனஉறுதி தேவை

நோய் தொற்றிலிருந்து மீண்டுவந்தது குறித்து அசோக்குமார் கூறும்போது, “கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனாவில் இருந்து மீண்டுவர மருத்துவர்கள், காவல் ஆணையர் உட்படபோலீஸ் அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். சரியான முறையில் வழிகாட்டினர். மன உறுதியுடன் இருந்தால் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்சின்ஹா, தெற்கு மண்டல இணைஆணையர். சி.மகேஸ்வரி,காவல் துணை ஆணையர்கள்பி.பகலவன் (அடையாறு), கே.பிரபாகர் (புனித தோமையர்மலை), ஆர்.திருநாவுக்கரசு(நுண்ணறிவுப் பிரிவு), எம்.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவல்ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார்.

SCROLL FOR NEXT