தமிழக சிபிசிஐடி டிஜிபி ஜாஃபர் சேட் உள்ளிட்ட 2 டிஜிபிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் 3 ஆண்டுகள் பணி முடித்துள்ளார். டிஜிபி லட்சுமி பிரசாத், திருச்சி ஆணையர் வரதராஜு, ஏடிஜிபி மாகாளி உள்ளிட்ட பல ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. அதன் முதல் கட்டமாக டிஜிபிக்கள் 2 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் ஏ.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழக சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக பதவி வகிக்கும் ஜாஃபர் சேட் உணவுப்பொருள் வழங்கல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உணவுப்பொருள் வழங்கல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபியாக பதவி வகித்துவரும் பிரதீப் வி பிலிப் சிபிசிஐடி பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.