தமிழகம்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு: வேலூர், திருப்பூரில் 107 டிகிரி வெயில் பதிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி,தென்காசி விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சிலஇடங்களில் கனமழை பெய்யலாம்.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளது. அதனால் பகல் நேரங்களில் மக்கள்வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

நேற்று மாலை 5.30 மணி வரைபதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பூர், வேலூரில் தலா 107 டிகிரி,ஈரோடு, திருத்தணி, காஞ்சிபுரத்தில் தலா 106 டிகிரி, சேலத்தில் 105டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி, மதுரையில் 103 டிகிரி,திருப்பத்தூர், பாளையங்கோட்டை, பெரியகுளம், தருமபுரியில் தலா 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT