தமிழகம்

சித்த மருத்துவம் பாதுகாப்பானது, சிக்கனமானது: சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

சித்த மருத்துவம் பாதுகாப்பானது மட்டுமல்ல, அதற்கு செலவும் குறைவு என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

உலக சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம், ‘நலம் காக்கும் சித்த மருத்துவம்’ புத்தகம் வெளியீடு மற்றும் சித்த மருத்துவ தகவலுக்கான www.siddhaMD.com என்ற இணையதளம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தர் குப்புசாமி ஆகியோர் அறக்கட்டளையை தொடங்கி வைத்தனர்.

மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், ஊடகவியலாளர் கோமல் அன்பரசன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை முன்னாள் இயக்குநர் சொர்ண மாரியம்மாள் ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டனர்.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவ அலுவலர் கே.பரமேசுவரன் உள்ளிட்ட பலர் இணையதளத்தை தொடங்கி வைத்தனர். விழா வில் ஜெ.ராதாகிருஷ் ணன் பேசும்போது, ‘‘சித்த மருத்து வத்தால் தமிழகத்துக்கு பெருமை. உலக அளவில் சித்த மருத்துவம் பரவியுள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக இருந்த டெங்கு காய்ச்சல், சித்த மருத்துவம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. சித்த மருத்துவம் பாதுகாப்பானது மட்டுமல்ல, செலவும் குறைவு. நானும், எனது குடும்பத்தினரும் சித்த மருத்துவத்தை பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT