தமிழகம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும் திறப்பு: கேரள வியாபாரிகள் வராததால் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் தோ வாளை மலர் சந்தையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கரோனா ஊரடங்கால் சந்தை மூடப்பட்டிருந்தது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், 2 மாதங்களுக்குப் பின் நேற்று தோவாளை மலர் சந்தை திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடந்தது. உள்ளூர் வியாபாரிகள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஆனால், ஊரடங்கால் கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் பூக்கள் தேக்கமடைந்தன.

SCROLL FOR NEXT