தமிழகத்தில் கரோனா பரவலால் மார்ச் 24-லில் அமலான ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது.
மார்ச் 25 முதல் ஜூன் 5 வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் ஜூன் 6 வரை தாமதக் கட்டணம் மற்றும் மறு மின் இணைப்புக் கட்டணம் இல்லாமல் செலுத்தலாம் என்றும் மே 19-ல் மின்வாரியம் அறிவித்தது.
இதற்கு மாறாக மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மின் கட்டணம் செலுத்தாதோருக்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டணத்தைச் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்கு மாறு மின்வாரியம் சார்பில் நினை வூட்டல் மின்னஞ்சல் தற்போது அனுப்பப்பட்டு வருகிறது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இஸ்மாயில் கூறுகையில், ஊரடங் கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிலையை அறிந்தே மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஒவ்வொரு ஊரடங்கின்போதும் நீட்டிக்கப்படுகிறது.தற்போது காலக்கெடுவுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இதை மின்வாரியம் கைவிட வேண்டும், என்றார். கி.மகாராஜன்