தமிழகம்

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் பி.தங்கமணி தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தை பொறுத்தவரை இலவச மின்சாரத் திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தமிழக முதல்வரின் கொள்கை என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி. தங்கமணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடலுார் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் விவசாய பணிகளுக்கு புதிய மின் இணைப்பு பெறுபவர்களுக்கு மீட்டர் பொறுத்துவதாக தகவல் வெளியாகியது. இது தவறான தகவல்.

தமிழகத்தை பொறுத்தவரை இலவச மின்சாரத் திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தமிழக முதல்வரின் கொள்கை. தட்கல் திட்டத்தில் இணைப்பு பெறுவர்களுக்கு மீட்டர் பொருத்தலாம் என்றிருந்தது. தற்போது, அத்திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளுக்காக மின் இணைப்பு பெற்றால் மீட்டர் பொருத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

தொடர்ந்து, “முதல்வர் தனக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்பதற் காக அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி, தன்னை முன்னிலைப்படுத்தி வருவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு” குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “கரோனா பரிசோதனையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

இச்சூழலில் தமிழக அரசுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்பதற்காக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார்” என்றார்.

SCROLL FOR NEXT