தமிழகம்

மதுரையிலிருந்து பிஹாருக்கு 2-வது முறையாக 1637 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம்

என்.சன்னாசி

மதுரையில் இருந்து பிஹாருக்கு 1637க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று புறப்பட்டுச் சென்றனர்.

கரோனா தடுப்புக்கான பொது ஊரடங்கையொட்டி மதுரை உட்பட தென் மாவட்டங்களில் வேலையன்றி தவித்த புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் விருப்பத்தின்பேரில் சொந்த ஊர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்கிறது.

ஏற்கெனவே மதுரை, விருதுநகர், சிவகங்கை உள் ளிட்ட மாவட்டங்களைச் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மதுரையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் உத்தரபிரதேசம், பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மதுரையில் இருந்து 2வது முறையாக பிஹார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1636 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் ஒன்று இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டது.

இந்த ரயிலில் பயணிக்க, விருப்பம் தெரிவித்த தொழிலாளர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்தும் முன்கூட்டியே பேருந்துகளில் வரவழைக் கப்பட்டனர்.

உலகத் தமிழச் சங்க கட்டிடம் உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்கு, நோய் தொற்று அறிகுறி குறித்த மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு, முகக்கவசம் போன்ற தடுப்பு சாதனங்களும் வழங்கப்பட்டன.

இதன்பின், ரயில் நிலையத்திற்கு பேருந்துகளில் உடைமை களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். சமூக இடை வெளிவிட்டு வரிசையாக நிறுத்தி சிறப்பு ரயிலில் ஏற்றினர்.

மாவட்ட ஆட்சியர் டிஜி. வினய் கொடியசைத்து வைத்து அவர்களின் பயணத்தை தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT