மும்பையில் இருந்து வந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர்கள் பலர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அவர்கள் மும்பையில் இருந்து காரில் 8 மாத குழந்தை உள்ளிட்ட 8 பேர் வந்தனர்.
கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில், அவர்களை நிறுத்திய போலீஸார் தனியார் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைத்தனர்.
அவர்களுக்கு எடுத்தா சளி பரிசோதனையில், 23 வயது இளம்பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் இளம்பெண்ணையும், அவரது 8 மாத குழந்தையையும் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.