சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கடைகளில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு கடையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ரூ.4லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த நாதுசிங் (25), மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ்ரானா(29) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.