ரம்ஜான் பண்டிகை நாளை (மே 25) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்.25-ம் தேதி முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கப்பட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. அதனால், முஸ்லிம்கள் வீட்டிலேயே, சமூக இடைவெளி யைப் பின்பற்றி தொழுகை நடத்தி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக அரசு தலைமை காஜி சலா வுதீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப் பில், ‘ஷவ்வால் மாதத்துக்கான புதிய பிறை சனிக்கிழமை (நேற்று) தென்படாத நிலையில், ரம்ஜான் பண்டிகை திங்கள்கிழமை (நாளை) கொண்டாடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.