டாஸ்மாக் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் டாஸ்மாக் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் வழங்கப்பட்ட மார்ச் மாதத்துக்கான இருப்பு தொகைக்கும் மார்ச் 24-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வழங்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கும் இடையே இருப்பு குறைவுக்கு உள்ள வித்தியாசத் தொகையை அந்தந்த மாவட்ட மேலாளர்களின் அறிவுரைப்படி 2 சதவீதம் அபராதமும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வித்தியாசத் தொகையை அபராதத்துடன் செலுத்தி உள்ளனர்.
தற்போது மீண்டும் அந்த வித்தியாசத் தொகையில் 50 சதவீத அபராதத் தொகையும் வட்டியுடன் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டுமென மாவட்ட மேலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது டாஸ்மாக் ஊழியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். பெரிய முறைகேடுகளை செய்தவர்களை மாவட்ட மேலாளர்கள் தப்பிக்க விட்டுவிட்டு நேர்மையான பணியாளர்களை வஞ்சிப்பது கைவிடவேண்டும்.
வங்கி மூலம் விற்பனை தொகையை வசூல் செய்யாமல் பணியாளர்கள் கெட்ட சொல்வதை கைவிட வேண்டும்.
திருட்டுப்போன மதுபான தொகையை பணியாளர்களை கட்ட நிர்ப்பந்திக்க மல் காப்பீடு மூலம் பெற வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி inறு டாஸ்மாக் ஊழியர்கள் கோவில்பட்டியில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.