தமிழகம்

சினிமா தொழிலாளர்களுக்கு 25000 முக கவசங்கள்: தமிழக பாஜக சார்பில் விநியோகம்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 25,000 முக கவசங்களை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

தமிழகத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக பாஜக சார்பில் 25 ஆயிரம் முக கவசங்கள் வழங்கப்பட்டன.

தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்ஸியின் தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் நிர்வாகிகளிடம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

இந்த நிகழச்சியில் இசை அமைப்பாளர் தினா அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாஜக மாநில துணைத்தலைவர் M.N.ராஜா ,மாநில செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT