குமரியில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்ற 27 பேர் குணமடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று மேலும் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மற்றும் சோதனைச்சாவடி அருகே உள்ள முகாம்களில் களப்பணியாளர்கள் மூலம் இதுவரை 11091 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவற்றில் 51 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 16 பேர் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தவர்கள். மற்ற அனைவரும் சென்னை உட்பட பிற மாவட்டம், மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 21 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நேற்று மாலை 3 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
இதைத்தொர்ந்து இதுவரை குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5 பேருக்கு இரு கட்டமாக நடந்த மருத்துவ பரிசோதனையில் நோய் குணமாகியிருப்பது தெரியவந்தது.
அவர்களை இன்று டிஸ்சார்ஜ் செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.