திருப்பாச்சேத்தி அருகே சடங்கி பகுதியில் சவுடு மண் குவாரியில் அள்ளுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள மணல். 
தமிழகம்

சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை: சிவகங்கை  திருப்பாச்சேத்தி அருகே கிராமமக்கள் எதிர்ப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்புவனம் ஒன்றியம் திருப்பாச்சேத்தி அருகே வைகை ஆற்றையொட்டியுள்ள தனியார் நிலங்களில் 3 அடிக்கு கீழே மணல் கிடைக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கானூர் அடுத்த சடங்கி கிராமத்தையொட்டி பகுதியில் தனியார் நிலத்தில் சவுடு மண் அள்ளுவதற்கு சிலர் அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கானூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பாதை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் கூறியதாவது: சவுடு மண் குவாரிக்கு அனுமதி பெற்று கொண்டு மணலை அள்ளி லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனர்.

இதற்காக 20 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டியுள்ளனர்.

கானூர் பகுதியில் ஏராளமான விவசாய கிணறுகள், பல்வேறு ஊர்களுக்கான குடிநீர் திட்டங்கள் உள்ளன. அளவுக்கதிகமாக மணல் அள்ளுவதால் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டு குடிநீர் திட்டங்கள், விவசாய கிணறுகள் பாதிக்கப்படும். மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT