தமிழகம்

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி வனப்பகுதிகளை மாற்றக்கூடாது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழக வனத் துறை வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கை செய்யும் பணி, அதன் முன்னேற்றம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அதில், மேற்குத் தொடர்ச்சி மலை பரவியுள்ள மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், வனத் துறை தலைவர் துரைராசு, தலைமை வன உயிரினக் காப்பாளர் சி.யுவராஜ், வனத் துறை சிறப்பு செயலர் தீபக் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:

தமிழ்நாட்டில மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந் ததாக தெரிவிக்கப்பட்டுள்ள பகுதி களை மட்டுமே மத்திய அரசால் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி வனங்களில் மாற்றம் எதுவும் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT