தமிழகத்தில் ரூ.498.51 கோடியில் 1387 பொதுப்பணித்துறை கண் மாய்களை விவசாயிகள் பங்களிப்புடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், பேரையூர் கவுண்டமா நதி, திருமாணிக்கம், அணைக்கட்டு, மொச்சிகுளம் அணைக்கட்டு, மந்தியூர் அணைக் கட்டு, செம்பரணி அணைக்கட்டு பகுதியில் குடிமராமத்து பணி யை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் இன்று தொடங்கி வைத்து அவர் பேசியது:
முதல்வர் போர்கால அடிப்படையில் சீரிய பல நடவடிக்கைகளை எடுக்கிறார். ஊரடங்கு நேரத்திலும் விவசாயப் பணிகள் பாதிக்கா மல் இருக்க, முன்னுரிமை கொடுத்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து, விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க திட்டங்களை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1387 பொதுப்பணித்துறை கண் மாய்களை விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தில் கீழ் ரூ.498.51 கோடியில் புனரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதன்படி, உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் குண்டாறு வடிநிலக் கோட்ட ஆளுகையின் கீழ் ரூ. 390 லட்சம் மதிப்பீட்டில் 2 கண்மாய், வரட்டாறு, கவுண்டமாநதி, புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
பேரையூர் பகுதியில் கரிசல்குளம் கண்மாய், திருமாணிக்கம் அணைக்கட்டு, மொச்சிகுளம் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளும் புனரமைக்கப்படுகின்றன. மழைக்காலங் களில் மழைநீர் எவ்விதத்திலும் விரயமின்றி கண்மாய்களுக்கு செல்லவசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மாவட்டங்களில் கோடையில் தண்ணீர் தட்டுபாடின்றி இருக்க, வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் மே 25 பிற்பகல் முதல் 28 முற்பகல் வரை தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதன்மூலம் மக்களின் தாகம் தீர்ப்பதோடு நீலத்தடி நீர் மட்டமும் உயரும், என்றார். மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.