தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் பலியானார். இதனால், தேனி மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
தேனிமாவட்டம், ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுருளிமுத்து என்ற 70 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 10-ம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கோயம்பேடு கரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் இந்த முதியவருக்கு தொற்று ஏற்பட்டது.
கரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்கனவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். கரோனா வார்டில் சிகிச்சை பெற்ற அவருக்கு உணவுக்குழாய் மூலமாகவே உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுருளிமுத்து பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இன்னும் 52 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.