தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த 16-ம் தேதி காற் றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் உம்பன் புயலாக உரு வெடுத்தது. 17-ம் தேதி நள்ளிரவு ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தூறல் மழை பெய்தது. மேலும் பலத்த சூறாவளிக் காற்றால் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் ஆகிய பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேத மடைந்து கரை ஒதுங்கின.
மேலும், பாம்பன் துறை முகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் 20-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. 21-ம் தேதி மாலை உம்பன் புயல் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் கடற்பகுதி வழியாகக் கரையைக் கடந்தது.
இந்நிலையில், நேற்று தனுஷ் கோடியில் மன்னார் வளைகுடா கடல் அலையில் இருந்து நுரைவெளியே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மீனவர்கள் கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று கடலைப் பார்வையிட்டுச் சென்றனர்.
இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலின் கிளர்ச்சியால் அலைகளில் ஏற் படும் நுரை புரதங்களை உள் ளடக்கியது. இவை கடலில் உள்ள பாசிகளினால் உருவா க்கப்படுபவை. இவை கடல் சீற்றம், புயலுக்கு பின்னரும் ஏற்படும். கப்பல்களினால் வெளியேற்றப்படும் வேதியியல் கழிவாலும் நுரை ஏற்படும். கடல்நீரின் மாதிரியைச் சோதனை செய்த பின்னரே உறுதியாகக் கூற முடியும், என் றார். திடீர் நுரையால் அச்சமடைந்த மீனவர்கள் இது குறித்து மீன்வளத் துறையும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.