தமிழகம்

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்து வழங்கக்கோரி வழக்கு 

கி.மகாராஜன்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளோடு சேர்த்து ஹோமியோபதி மருந்தையும் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹோமியோபதி மருத்துவ நல சங்கத்தின் செயலாளர் பக்ரூதின் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:

மத்திய ஆயூஷ் அமைச்சகத்தின் ஒப்புதல் படி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும் , கரோனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஹோமியோபதி மருந்தான ''ஆர்சனிக் ஆல்பம் 3 சி மருந்தை கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோமியோபதி மருந்து மணிப்பூர் மாநிலத்தில் வழங்கபட்டு வருகிறது.

தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின்படி, தெலுங்கானாவில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளோடு சேர்த்து ஹோமியோபதி மருந்தான ''ஆர்ஷனிக் ஆல்பம் 3 சி" மருந்தையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறபட்டுள்ளது

இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT