தமிழகம்

கேரளாவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு லாரியில் செல்ல முயன்ற 75 தொழிலாளர்கள் ராஜபாளையத்தில் தடுத்து நிறுத்தம்

இ.மணிகண்டன்

கேரள மாநிலம் பத்தனதிட்டாவிலிருந்து மேற்கு வங்கத்திற்கு லாரியில் அணுமதியின்றி செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை ராஜபாளையம் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச்சாவடியில் போலீஸார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கேரளாவிலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர் ‌ அதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 75 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுமதியின்றி அழைத்துச் செல்லப்பட்ட தெரியவந்தது.

மேலும் கேரள மாநிலம் பத்தனம் திட்டா வில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இவர்கள் என்பதும் உரிய அனுமதி பெறாமல் லாரியில் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் ராஜபாளையம் வட்டாட்சியர் ஆனந்தராஜ், டிஎஸ்பி நாகசங்கர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.

அதையடுத்து தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தேவிபட்டினம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 75 பேரும் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து அதன் பின்பு இவர்களை ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT