பிஹாருக்கு அனுப்புவதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலை யத்துக்கு அரசுப் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட தொழி லாளர்கள், வெயிலில் நின்ற பேருந்துக்குள் 1 மணி நேரமாக காத்திருக்க வைக்கப்பட்டதால் அவதிக்குள்ளாயினர்.
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை யொட்டி, தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு பாது காப்பாக அனுப்பி வைக்கப்படுவர் என்று தமிழக முதல்வர் பழனி சாமியும் அறிவித்திருந்தார்.
ஏற்கெனவே மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து திருச்சிக்கு தொழிலா ளர்கள் வந்த நிலையில், திருச்சியில் இருந்து உத்தர பிர தேசத்துக்கு தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், பிஹார் மாநி லத்தைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமானோர் சொந்த மாநி லத்துக்குச் செல்ல பதிவு செய்தி ருந்தனர்.
இவர்களில் திருச்சி மாவட்டத்திலிருந்து 1,009 பேர், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 416 பேர் என பிஹார் மாநில தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் 1,425 பேர் அரசுப் பேருந்துகளில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, ஒரு மணி நேரமாக வெயிலில் நின்ற பேருந்துக்குள்ளேயே காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால், ஊருக்குத் திரும்பும் மகிழ்ச்சியில் வந்த தொழிலாளர்கள், வெயி லின் கொடுமையால் தகித்த பேருந்துக்குள் தவித்து அவதிக் குள்ளாயினர்.
தொழிலாளர்கள் அவதிப்படு வதை ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகளோ, ரயில்வே பாதுகாப்புப் படையினரோ, மாநகர காவல் அதிகாரிகளோ பொருட்படுத்தவில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஒவ்வொரு பேருந்தாக ரயில் நிலைய பிரதான வாயிலுக்கு கொண்டு வரப்பட்டு, தொழிலாளர்கள் இறங்கி ரயில் நிலையத்துக்குள் செல்ல அனும திக்கப்பட்டனர்.
ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது ஒவ்வொருவ ருக்கும் பிஸ்கட், தண்ணீர், உணவுப் பொட்டலங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப் பட்டன. திருச்சியிலிருந்து புறப் படும் இவர்கள் அனைவரும் பிஹார் மாநிலம் மோதிகாரி ரயில் நிலையத்தில் இறங்கி, அவரவர் ஊர்களுக்குச் செல்வார்கள்.