கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 9789 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 47 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் 23 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த குமரி மாவட்டம் சூரங்குடி பகுதியைச் சேர்ந்த தாய், மகன் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று இறுப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 16 பேர் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தவர்கள். மற்றவர்கள் குமரி மாவட்டத்துடன் தொடர்பில் இருந்த வெளிமாவட்டம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில கரோனாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.