திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாட்களாக இருந்த கூட்டம் நேற்று இல்லை.
ஊரடங்கால் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் அரசு தளர்வை அறிவித்து கடைகளை திறந்தாலும் உயர் நீதிமன்ற உத்தரவால் கடைகள் மீண்டும் மூடப்பட்டன.
அதன்பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. முதல் 2 நாட்களுக்கு கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று குறைந்த எண்ணிக்கையிலேயே மது வாங்கிச் சென்றனர்.
நேற்று காலை முதலே கூட்டம் இல்லாமல் கடைகள் வெறிச்சோடின. பணப்புழக்கம் குறைந்து விட்டதா அல்லது மது வாங்க ஆர்வமில்லையா என கடை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர்.
கூட்டம் இல்லாத நிலையிலும் கடைகளில் போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.