தமிழகம்

கோயம்பேட்டியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த வியாபாரிக்கு கரோனா

எஸ்.கோமதி விநாயகம்

சென்னை கோயம்பேட்டியில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த வியாபாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் சந்ததியினர் குடியிருப்பை சேர்ந்த 47 வயதுடையவர், சென்னை கோயம்பேட்டு சந்தையில் நவதானிய வியாபாரம் செய்து வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், கடந்த 15-ம் தேதி சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு, மறுநாள் காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து விபரத்தை கூறினார்.

உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சளி, ரத்த மாதிரி எடுத்தனர். பின்னர் அவரை பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் அங்கு வந்து, அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், வியாபாரி தங்கியிருந்து வீட்டு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT