கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 பேராக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 9208 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏற்கனவே 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 23 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தொடர்ந்து 304 பேர் வீடுகளில் தனிமமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலயத்தில் வந்திறங்கி கேரளா வழியாக வந்த மஞ்சாலுமூட்டை சேர்ந்த வாலிபர், மேலபுத்தேரியை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 47 பேராக உயர்ந்துள்ளது.