திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்திருக்கிறது.
இம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 206 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மானூரில் 10 பேர், நாங்குநேரி- 5, களக்காடு- 1, சேரன்மகாதேவி- 2, வள்ளியூர்- 1, ராதாபுரம்- 1 என்று இன்று மேலும் 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.