தமிழகம்

‘தி இந்து‘ செய்தி எதிரொலி: மஞ்சள் நீர் கால்வாயில் ரூ.10 லட்சத்தில் சீரமைப்பு பணிகள்

செய்திப்பிரிவு

மஞ்சள் நீர் கால்வாயின் தடுப்பு சுவர் களை உடைத்து, அதில் நகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, கால்வாயை தூர் வாரவும் தடுப்பு சுவர்களை சீரமைக்கவும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் அமைந்துள்ளது ஒக்கப்பிறந்தான் குளம். இந்த குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீரை, வையாவூர் ஏரிக்கு கொண்டு சேர்க்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நகரின் மையப்பகுதியில் மஞ்சள் நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பின் காரணமாக நாளடைவில் குளக்கரை பரப்பளவு சுருங்கி, மஞ்சள் நீர் காய்வாயில் மழைநீர் செல்வதும் குறைந்தது.

இந்நிலையில், நகரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப்பட்டது. நகராட்சி யின் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம், மஞ்சள்நீர் கால்வாயின் தடுப்பு சுவர்களை உடைத்து ஆங்காங்கே கழிவுநீரை வெளியேற்றுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பராமரிப்புப் பணி களும் முறையாக மேற்கொள்ளப் படுவதில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர். மஞ்சள் நீர் கால்வாயை தூர்வாரி அதன் தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நகராட்சி நிர் வாகம் பாதாள சாக்கடையின் பரா மரிப்புப் பணிக்கு 2014-15ம் ஆண்டு ரூ.1.10 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தது.

இதுதொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் கடந்த 10-ம் தேதி புகைப்படத்துடன் செய்தி வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து, நகராட்சி பொதுநிதி மூலம் மஞ்சள் நீர் கால்வாயை தூர் வாருவதற்கு ரூ.7 லட்சம் மற்றும் தடுப்பு சுவர்களை சீரமைக்க ரூ.3 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி பொறி யாளர் சுப்புராஜ் கூறியதாவது: மஞ்சள் நீர் கால்வாயின் தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே உடைந்துள்ளது. இதனால், அதில் செல்லும் கழிவுநீர் குடியிருப்புப் பகுதியில் வெளி யேறும் நிலை உள்ளது. மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், கால்வாயில் தேங்கியுள்ள முட்புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பொக் லைன் இயந்திரம் மூலம் அகற்றி, தடுப்பு சுவர்களை சீரமைக்க நகராட்சியின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT