திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 12 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்திருக்கிறது.
இம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 754 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையின்போது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த12 பேருக்கும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
359 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியிருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்திருக்கிறது.