சட்டப்பேரவை கூட்டத் தொடர் 24-ம் தேதி தொடங்குவதை அடுத்து, சட்டப்பேரவை அரங்கின் மின் இணைப்பு, குளிர்சாதன வசதிகளை சீரமைத்தல், பராமரிப்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கையை அப்போதைய நிதியமைச்சரும், முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார்.
தொடர்ந்து, துறை வாரி மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப் பேரவை கூடும் என எதிர்பார்க் கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவா திக்க சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தின.
இந்நிலையில், கடந்த சில தினங்கள் முன் சட்டப்பேரவை இம்மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் அறிவித்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவை அரங்கில், கூட்டத்தை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
பேரவை அரங்கை சுத்தம் செய்தல், அரங்குக்கு தேவையான மின்வசதி, குளிர்சாதன வசதிகளை சீரமைத்தல், ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுதவிர மானியக் கோரிக்கை புத்தகங்கள் தயாரிக்கும் பணியும் நடந்துவருகிறது. துறைதோறும் அமைச்சர்கள் கூட்டம் நடத்தி, தேவையான அறிவிப்புகள் வெளி யிடுவது குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.