தமிழகம்

கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி எச்சரித்துள்ளார்.

ராசிபுரம் அருகேயுள்ள மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திப்பாளையம், திம்மநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உணவுத் தொகுப்புகளை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது தற்காலிக பணிநீக்கம் மற்றும் நிரந்தர பணி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

தமிழகத்தில் கோடைகாலத்தில் நாள் ஒன்றுக்கு 17 ஆயிரம் மெகாவாட் மின் நுகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 13 ஆயிரம் மெகாவாட் தான் மின் நுகர்வு உள்ளது. வரும் நாட்களில் மின்நுகர்வு அதிகபட்சமாக, 17 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தாலும், அதை பூர்த்தி செய்வதற்கு மின்வாரி யம் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT