தமிழகம்

போடியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில்  தங்கியிருந்த இளைஞர் தற்கொலை

என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 75 பேர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டிபட்டி அருகே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, போடி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வந்த டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, போடி அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT