தமிழகம்

காரைக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 160  பிஹார் தொழிலாளர்கள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து நேற்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 160 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரைக்குடி பகுதியில் தனியார் தொழிற்சாலைகள், வெல்டிங், கட்டுமான பணிகளில் பீஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலையின்றி தவித்தனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தன்னார்வலர்கள் செய்து வந்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.

இந்நிலையில் காரைக்குடி பகுதியில் இருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 160 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று அவர்களை 4 பஸ்கள் மூலம் விருதுநகருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பீகார் மாநிலத் தொழிலாளர்கள்.

SCROLL FOR NEXT