தமிழகம்

தமிழக மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை

செய்திப்பிரிவு

கச்சத்தீவு அருகே மீன் பிடித் துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை ஆடைகளை களைந்து இலங்கை கடற்படை யினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூவாயிரத்துக் கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீனவர்கள் திங்கட் கிழமை இரவு மீன்பிடித்துக் கொண் டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து விசைப் படகுகளில் ஏறி, அதில் இருந்த மீனவர்களை ஆடைகளை களைந்து தாக்குதல் நடத்தியதுடன், வலைகளை வெட்டி கடலில் முழ்கடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

இலங்கை கடற்படையினரின் திடீர் தாக்குதலால் அச்சமடைந்த மீனவர்கள் இரவோடு இரவாக கரை திரும்பத் தொடங்கினர். அப்போது ராமேசுவரத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரின் படகில் துளை ஏற்பட்டு நடுக்கடலில் மூழ்கியது. இந்தப் படகில் இருந்த மீனவர்களை, மற்றொரு படகில் ஏற்றி காப்பாற்றி கரை சேர்த்தனர்.

மேலும் கிருபை என்பவரின் படகு நடுக்கடலில் இயந்திரக் கோளாறால் நின்றது. இதை மீட்கச் சென்ற கென்னடி என்பவரது படகில் வெங்கட் சுப்பிரமணியன் என்பவர் இருந்தார். இரண்டு படகுகளுக்கிடையே இவரது கை சிக்கியதில் இரண்டு விரல் கள் துண்டாகின. வெங்கட் சுப்பிரமணியன் ராமநாதபுரத் தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வந்ததால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் இல்லாமல் இருந்தது. தற்போது, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதலை, இலங்கை கடற்படை மீண்டும் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT