திண்டுக்கலில் உள்ள மொத்த வெங்காய மார்க்கெட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயமும் விற்பனைக்கு வரு கின்றன.
பின்னர், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு வெ ங்காயம் அனுப்பப்படுகிறது. மார்க்கெட் கூடும் நாட்களில் ஒரு நாளைக்கு 5000 மூட்டைகள் வரை வெங்காயம் வரத்து இருக்கும்.
ஆனால் ஊரடங்கால் தற் போது ஒரு நாளைக்கு 1,500 மூட்டைகள் மட்டுமே வெங்காய வரத்து உள்ளது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இருந்து பெரிய வெங்காயம் வந்தபோதும் மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.13-க்கு விற்கப்படுகிறது.
ஓட்டல்கள் செயல்படாதது, விசேஷங்கள் நடத்த முடியாததால் பெரிய வெங்காயத்தின் தேவை குறைந்துவிட்டது.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற் பனையாகிறது. திண்டுக்கல், அரியலூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைந் துள்ளது.
தற்போது தேவை குறைவால் சீரான விலையிலேயே உள்ளது என்று வியாபாாிகள் தெரிவித்தனர்.