திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப்பகுதிகளிலும் பிற இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
சேரன்மகாதேவி- 1.20, பாளையங்கோட்டை- 0.40, திருநெல்வேலி- 0.20, குண்டாறு- 1, அடவிநயினார்- 3, சங்கரன்கோவில்- 6, சிவகிரி- 10, தென்காசி- 2.30.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 46.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 39.58 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 195 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.