தமிழகம்

மேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் காமராஜ்

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் ஆனைக்குப்பம், பில்லூர் ஊராட்சிகளில் குடி மராமத்து திட்டப் பணிகளை நேற்று தொடங்கி வைத்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் தொடர்ந்து இருந்த வரலாறு இதுவரை இல்லை. தமிழக முதல்வரின் ஆட்சியில் நிகழாண்டு 100 அடி தண்ணீர் உள்ளது.

இப்பகுதி விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணை திறப்பு குறித்த செய்தியை வெகு விரைவில் முதல்வர் வெளியிடுவார் என விவசாயி களுடன் சேர்ந்து நானும் எதிர் பார்க்கிறேன்.

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.20.23 கோடி மதிப்பீட்டில் 88 பணிகள் உட்பட தமிழகம் முழு வதும் 499.8 கோடி மதிப்பீட்டில் 1,387 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு, ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பே அனைத்து குடிமராமத்துப் பணி களும் செய்து முடிக்கப்படும்.

குறுவை சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள், விதைநெல் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. திருவாரூரில் ஏற்கெனவே முடிக் கப்படாமல் இருந்த 7 பணிகளும் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT