தமிழகம்

வெளி மாநிலத்திலிருந்து வருவோரால் கரோனா பாதிப்பில் சதத்தை எட்டும் நெல்லை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆக இருந்தது. மாவட்ட எல்லையிலுள்ள கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில் மும்பையிலிருந்து வந்திருந்த தெற்கு அரியகுளம், மாதவக்குறிச்சி, காவல்கிணறு பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதியானது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் வெளிமாநிலத்திலிருந்து வருவோரால் நோய் தொற்று எண்ணிக்கை சதத்தை தாண்டும் நிலை உள்ள தாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மாலத்தீவிலிருந்து கடற்படைக் கப்பலில் அழைத்து வரப்பட்ட தென்மாவட்ட தொழிலாளர்கள் 26 பேர் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோல், தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு 2 கார்களில் 11 பேரும், நேற்று காலை 2 கார்களில் 13 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து உரிய அனுமதி பெற்று வந்தனர்.

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 101 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT