திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடகனாறு ஆற்றில் மினி லாரியில் பட்டப் பகலில் மணல் திருடிச் செல்லும் கும்பல். படம்: பு.க. பிரவீன் 
தமிழகம்

திண்டுக்கல்லில் தடையின்றி மணல் திருட்டு: கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கால் பிற வாகனங்கள் சென்றுவர பலத்த கெடுபிடி உள்ள நிலையில், போலீஸார் கண்காணிப்பு இருந்தும் தங்கு தடையின்றி லாரிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு, குளம், கண்மாய்களில் பரவலாக மணல் திருட்டு என்பது வாடிக்கையாக நடைபெறும். ஊரடங்கு காலத்தில் தொடக்கத்தில் மணல் திருட்டு சிறிது குறைந்திருந்தது. ஆனால், சில நாட்களாக ஆறு, குளம், கண்மாய்களில் மணல் திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது.

வேடசந்தூர் அருகேயுள்ள குடகனாற்றில் மினிலாரியில் மணல் கடத்தல் தங்கு தடையின்றி நடக்கிறது. வழக்கமான பணியின்போதே மணல் திருட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள், தற்போது கரோனா பணியில் இருப்பதால் மணல் திருட்டை முற்றிலுமாக கண்டுகொள்ளவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள் ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT