நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள இரண் டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி மாலை பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் அங்கு பணியிலிருந்த 2 நிரந்தர தொழிலாளர்கள், 6 ஒப்பந்த தொழிலாளர்கள் படுகாயம டைந்தனர்.
8 பேரும் திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இவர்களில் நிரந்தர தொழி லாளி சர்புதீன், ஒப்பந்த தொழி லாளி சண்முகம் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நிரந்தர தொழிலாளி பாவாடை(45) நேற்று முன்தினம் இறந்தார். ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன்(36) நேற்று இறந்தார்.
விபத்தில் சிக்கிய தொழிலாளர் களில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது என்எல்சி தொழி லாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் வலியுறுத்தல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 4 தொழிலா ளர்கள் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
என்எல்சி நிர்வாகம் தரமில் லாத கொதிகலன்களை பயன்படுத் துகிறதா? என்ற கேள்வி எழுந் துள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறி யுள்ளது.
தொழிற்சாலையில் உள்ள உபகரணங்களை பராமரிப்பதில் தொழிற்சாலை நிர்வாகம் அலட்சியம் காட்டக்கூடாது.
தொழிலாளர்களின் உயிருக்கு நிகர் எதுவும் இல்லை என்றா லும், தொழிலாளர்களின் குடும்பங் களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
அதேபோல என்எல்சி நிர்வா கமும் உயிரிழந்த தொழிலா ளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத் தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித் துக் கொள்கிறேன் எனத் தெரிவித் துள்ளார்.