புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 716பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஆயிங்குடியில் அண்மையில் நடந்த ஒரு துக்க நிகழ்சிக்கு சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து சுமார் 20 பேர் வந்தனர்.
இவர்களை பரிசோதித்ததில் 13 வயது சிறுமிக்கு கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிறுமி குணமடைந்ததையடுத்து இன்று (மே 13) வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேரில் இச்சிறுமியுடன் சேர்த்து 2 பேர் குணமடைந்து ஊர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.