நலவாரியத்தில் பதிவை புதுப்பிக்காத, பதியாத 62 லட்சத்து 86 ஆயிரத்து 118 கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழக அரசின் நிவாரணம் கிடைக்காமல் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர்கள் சங்க மதுரை மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர் இரா. கணேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
கட்டுமானத் தொழிலாளர் களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் ரூபாய், 2-ம் கட்டமாக ஆயிரம் ரூபாயை அரசு அறிவித்தது. இதில் முதல் தவணைத் தொகையே பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
அந்த தொகையும் நலவாரி யத்தில் பதிவு செய்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. மாநிலத்தில் 75 லட்சத்துக்கு மேல் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 30 லட்சம் பேர் மட்டும் நலவாரியத்தில் பதிவு செய்து ள்ளனர். இதில் 12,13,882 பேருக்கு மட்டும் அரசின் நிவாரணம் வழங்கப்படுகிறது.
பதிவைப் புதுப்பிக்காத தொழிலாளர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து அதிகாரிகள் நீக்கி விட்டனர்.
இதை அரசு கவனத்தில் கொண்டு பதிவைப் புதுப் பிக்காவிட்டாலும், அவர் களுக்கும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றார்.